search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச் சாவடிகள்"

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் 161 பதட்டமான வாக்குச்சாவடிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 240 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #LSPolls #SalemDistrict #CollectorRohini
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளது. சேலம் பாராளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 92 ஆயிரத்து 487 வாக்காளர்கள் உள்ளனர்.

    583 மையங்களில் 1809 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. சேலம் பாராளுமன்ற தொகுதியில் 161 பதட்டமான வாக்குச்சாவடிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 240 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், உதவு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 4257020-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் தேர்தல் மீறல்கள் தொடர்பான புகார்களை சி விஜில் என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் பதுவு செய்யலாம்.

    சேலம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங்கள் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது.

    தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும், அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபபட உள்ளது.

    பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை அறிந்துது கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 1950-க்கு நேரடியாக அழைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    அரசியல் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது, பொது சுவர்களில் அனுமதி இல்லாமல் விளம்பரம்செய்யக் கூடாது, ஏற்கனவே செய்யப்பட்ட விளம்பரங்களை அழிக்கும் செலவு அரசியல் கட்சியினர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

    அரசு புதுத் திட்டங்களை தொடங்கக் கூடாது, பழைய திட்டங்களை விரிவுபடுத்தக் கூடாது, பேனர்கள் வைக்கக் கூடாது. பதட்டமான வர்குச் சாவடிகளுக்கு துணை ராணுவம் அல்லது மத்திய பாதுகாப்பு படையை அழைப்பது குறித்து ஆலோசனை செய்து தேர்தல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது, இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது, பள்ளிகள் அருகில் பிரசாரம் செய்யக் கூடாது. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிதிகள் மட்டும் ரூ. 1 லட்சம் வரை எடுத்துச் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SalemDistrict #CollectorRohini
    ×